Wednesday 14 August 2013

தலைவா - தமிழக அரசியலின் சதியோ(யே)?

படத்தை பற்றி பேச போவதில்லை. விஜயை பற்றி பேச போவதில்லை.
இந்த நான்கு நாட்களில் தமிழக அரசியலின் கேலிக்கூத்தை பார்த்து வந்த கோபத்தில் எழுதுகிறேன்.


1.   ஒரு தமிழன் (வேறு எந்த மொழியிலும் நடிக்க மாட்டேன் என்று சொல்லி கொண்டிருக்கும் நடிகர்) நடித்த படம், தமிழ் நாட்டி‌ல் வெளியாகாமல் மற்ற மொழிகளில் வெளியானது தமிழனுக்கு பெருத்த அவமானம்.
2.   ஒரு மாநிலத்தின் முதல்வர் கொடநாட்டுக்கு சென்றால் வேறு எந்த அரசு அலுவல்களையும் செய்யாமல், படம் வெளியாகவில்லையே என்ற கவலையில் தேடி வந்தவருக்கு அனுமதி கூட தராமல் அப்படி என்ன வேலை உள்ளே உள்ளதோ?? அப்புறம் என்னத்துக்கு உங்களுக்கு முதல்வர் பதவி.
3.   தேடி வந்து பேச வந்த விஜய்க்கு அனுமதி இல்லை. விஜய் பற்றி அறிக்கை வெளியிட்டார் கருணாநிதி என்ற ஒரே காரணதுக்காக பத்து பக்கத்தில் பதில் அறிக்கை வெளியிட ஜெயாவுக்கு நேரம் இருக்கு போல.
4.   கருணாநிதி பெரிய அறிவாளி போல கேள்விகள் கேட்பதும், அதுக்கு ஜெயலலிதா பெரிய புத்திசாலி போல பதில் அறிக்கை விடுவதுமாக தெருக்குழாய் சண்டை நடந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில்.
5.   தமிழகத்தில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் கூட்டு சேர்ந்து கொண்டு வேறு எந்த ஒரு நபரையும் வளர விடாமல் தடுப்பதில் இருக்கும் முனைப்பு நன்றாக தெரிகிறது இந்த “தலைவா” பட தடையில்.
6.   தியேட்டருக்கு பாம் வைத்து விடுவோம் என்று சொன்னவர்களை பிடிக்க திறமை இல்லை. கோயம்பேட்டில் பாம் வைத்து விடுவோம் என்று மிரட்டல் தந்தவர் விஜய் ரசிகர் என்று இரண்டே நாட்களில் கண்டு பிடித்து விட்டார்களாம். – அப்ப தியேட்டருக்கு பாம் வைக்க சொன்னது யாரா இருக்கும்?
7.   இந்த பாழாப் போன ரெண்டு பேரும்தான் இப்படின்னா, இங்கு இருக்கும் எந்த ஒரு வெப்சைட்டும் இந்த தலைவா பட பிரச்சினையை பற்றி பேசவில்லை. இதே வெப்சைட்டுகள் அன்று “விஸ்வரூபம்” பிரச்சினைக்கு எத்தனை குரல் கொடுத்தது என்று ஒவ்வொருவருக்கும் நன்றாக தெரியும்.
8.   தொடர்ச்சியாக விஜய் படங்களுக்கு கருணாநிதியும் ஜெயலலிதாவும் பிரச்சினை கொடுத்து வருவது மட்டமான தொலைநோக்கை காண்பிக்கிறது.
9.   வரிவிலக்கு தான் பிரச்சினை என்றால் ஒரு வாரத்திற்க்கு முன்னேயே இந்த பிரச்சினையை சரி செய்திருக்கலாமே? முன்பதிவை ஆரம்பிக்க வைத்து, மற்ற இடங்களில் படத்தை வெளியிட வைத்து தமிழ் நாட்டில் மட்டும் தடை செய்வது எந்த வகையில் எடுத்து கொள்வது?
10. என்ன பிரச்சினையாக இருந்தாலும் ஒரு தமிழ் படத்துக்கு தமிழக முதல்வர் ஆதரவு தராமல் இவ்வாறு இழுத்தடிப்பது தமிழர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது.
11. பத்து ஆண்டுக்கு முன் ஆந்திர மாநிலம் மிகப்பெரும் வளர்ச்சி அடைந்தது. அங்கு ஆண்ட காங்கிரஸின் மோசமான ஆட்சியினால் இப்போது ஹைதராபாத் சீரழிந்து கொண்டிருக்கிறது. அதுபோல் தமிழகமும் ஆகலாம்.
12. தமிழன் அல்லாத கமலுக்கு ஆதரவு கொடுத்த நடிகர்கள் இன்று தமிழன் விஜய்க்கு மவுனம் சாதிக்கிறார்கள்.
13. இந்த தலைவா பட பிரச்சினையை பற்றி செய்தி வெளியிட எந்த ஒரு தமிழ் செய்தி சேனல்களுக்கும் துப்பு இல்ல. NDTV வந்து ஆங்கிலத்தில் பேட்டி எடுத்து செய்தி வெளியிடும் அளவுக்கு தமிழர்களின் நிலை கேவலமான நிலைமையில் உள்ளது என்பது வேதனைக்குரியது.

இந்த ஆதிக்கம் சினிமாவில் மட்டுமல்ல. மற்ற எல்லா துறைகளிலும் அரசியல் கை ஓங்கி உள்ளது. இப்படியே சென்றால் தமிழகம் விரைவில் பின் தங்கிய மாநிலமாக மாறும். ஜெயாவின் அராஜக ஆட்சி நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஜெயா, ஜாதி கட்சிகள் மற்றும் கருணாநிதி கைகளில் தியேட்டர், மீடியா, செய்தித்தாள், வெப்சைட்டுகள் மற்றும் கல்லூரி இருக்கும் வரை தமிழகம் முன்னேறாது.


ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருக்கும் வரை தமிழகத்தில் எந்த ஒரு புது முகமும், நல்ல எண்ணம் உள்ள எந்த ஒரு மாணவனும் அரசியலுக்கு வர முடியாது. வந்தால் அவனை சாகடிக்க பல பணம் படைத்த, தீய எண்ணம் படைத்த சக்திகள், திராவிட பெயர் கொண்ட கட்சிகள் எப்போதும் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கும்.