Sunday, 4 November 2012

ராஜன்-சின்மயி-கைது-அ முதல் ஃ வரை


ராஜனின் எதிர்ப்பும் ஆதரவும்..

இன்று ராஜன் 12 நாள் சிறை வாசத்திற்குப் பிறகு வெளியே வந்துள்ளார். அவர் சிறை பட்டு உள்ளே சென்றது முதல் இன்று வெளியே  வந்தது வரை பல சொல்லக்கூடிய விசயங்கள் த்விட்டரிலும், சமூகத்திலும் நடந்தேறிவிட்டன. அதனை பற்றி சிறிது பார்ப்போம்.

18-10-2012- THURSDAY

பாடகி சின்மயி அவர்கள் சென்னையில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆணையரை சந்தித்து இரண்டு புகார்களை தந்தார். முதல் புகார் குப்பையில் போடப்பட்டது என்று நினைக்கிறேன். இரண்டாவது புகார் பின்வருமாறு: “த்விட்டர் இணையதளத்தில் என்னை ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. ஆறு  பேர் சேர்ந்து இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பதாக புகார் மனுவை அளித்தார். (http://viruvirupu.com/2012/10/18/32964/)
-          
19-10-2012- FRIDAY


1. ONE INDIA வெப்சைட்டில் போலீசார் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுப்பதாக வெளியாயின. (http://tamil.oneindia.in/movies/news/2012/10/chinmayi-issue-police-take-action-against-6-persons-163389.html) சிறிது குழப்பம் மட்டும் ஏற்பட்டது. அனைத்து பத்திரிக்கைகளும் இவ்விசயத்தை பற்றி பதிவிட்டன. சின்மயி அவர்களும் தனது பேஸ்புக்கில் பக்கத்தில் சில பதிவினை வெளியிட்டு அவர் பக்க நியாயத்தை வெளியிட்டார் (https://www.facebook.com/permalink.php?story_fbid=10152139833399041&id=130027849040).

20-10-2012- SATURDAY

1. பிரச்சினை இவ்வாறு இருக்க முதன் முதலாக ராஜனுக்கு ஆதரவு கரம் நீட்டியவர் “கார்டூனிஸ்ட் பாலா”. இப்பிரச்சினையை சின்மயிக்கு எதிராக அவரது பேஸ்புக்கில் பக்கத்தில் தமிழின துரோகி என வெளியிட்டட்டார். பலர் அக்கருத்தினை ஆதரித்து “லைக்” செய்தும், “ஷேர்” செய்தும், சின்மயிக்கு எதிராக “கமென்ட்” செய்தும் இருந்தனர். அப்பக்கதிலும் சின்மயி ஒரு பத்திரிக்கையில் வேலை செய்யும் நீங்கள் இவ்வாறு எழுதுவது கண்டிக்க தக்கது என பதிவிட்டார். (https://m.facebook.com/photo.php?fbid=3797887552051&id=1423116401&set=a.1067477413504.2010471.1423116401&refid=52&_ft_=fbid.484252321606854&_rdr) ஏனோ. பாலா இந்த பதிவினை நீக்கிவிட்டார்.
அப்பக்கத்தில் ட்விட்டர் நண்பர்கள் பலர் சின்மயிக்கு எதிராக பதிவினை இட்டனர். அதில்வெகு சில இங்கு:
 

2. விஷயம் இவ்வாறு செல்லவே காவல்துறை கைது நடவடிக்கையினை எடுத்து வருகிறது என்ற செய்தியை பரவலாக பரவ ஆரம்பித்தது.

3. இதில் “ஜூனியர் விகடன்” பத்திரிக்கையானது செக்ஸ் என்றும் ஆபாச தாக்குதல் கொடுத்தனர் என்றும் கூறியது, உண்மையில்லா விசயத்தை வெளியிட்டனர் என்று கொதித்து போயினர் த்விட்டர்கள். இச்செய்தியை #juniorvikatan என்ற டேக்கில் கண்டித்தனர்.

21-10-2012- SUNDAY

1. இன்று ராஜனுக்கு திருமண நாள் என்றும் கூறப்பட்டது. எந்த அளவில் இது உண்மை என்று தெரியவில்லை. 

2. இந்நிலையில் சின்மயி அவர்களின் அம்மா அவர்களின் பாடகர் கிருஷ்-ஐ மிரட்டும் மிரட்டல் அலை பேசி அழைப்பு புதியவன் அவர்களால் வெளியிடப்பட்டது. (http://soundcloud.com/puthiyavan/singer-krish-threatened-by). 


22-10-2012- MONDAY


1. தோட்டா(@அவர்கள் “காதில் விழும் செய்திகள் கவலையை அளிக்கிறது” என்று ஒரு ட்விட் போட்டிருந்தார்.










2. மதியம் இரண்டு மணி அளவில் தான் விஷயம் பகிரங்கமாக வெளிப்பட்டது. “ராஜன்” கைது என்று. 
பரிசல் (அவர்கள் “ராஜன் அவினாசியில் இருந்து சென்னைக்கு கைது செய்யப்பட்டு அழைத்து செல்லபடுகிறார்” என்று சொன்னார். பலர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். பலர் தம் கடும் கண்டனங்களை வெளியிட்டனர். 

3. இந்நிலையில் மாயவரத்தான் என்பவர் (@mayavarathaan) ராஜன் மற்றும் பலரின் பழைய ட்விட்டுகளை மறைமுகமாக ஸ்க்ரீன்ஸாட் எடுத்து அவரது பக்கத்தில் போடப்பட்டது பலருக்கு பெரும் கோபத்தை எழுப்பியது. பலர் அவரை எட்டப்பன் என்றும், மன நோயாளி என்றும் சரமாரியாக திட்டினர்.

4. தோட்டா (@) அவர்கள் சமாதான முயற்சிக்காக சின்மயின் அம்மாவிற்கு ஒரு TWITLONGER எழுதினார். அதனால் சிலர் கோபத்தை குறைத்தனர்(http://www.twitlonger.com/show/jnuqpt).


5. பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. பலர் தங்களின் DP என்று சொல்லப்படும் புகைபடத்தை கருப்பாக்கி கொண்டு தங்களின் எதிப்பை தெரிவித்தனர். மேலும் பலர் தங்களின் ஹேண்டில் முன்னால் இருக்கும் பெயரினை ராஜனுக்கு ஆதரவாக “ராஜன் நண்பன்”, “ராஜனின் தங்கை”, “ராஜனுக்காக”, “ராஜன் விரும்பி”, “ராஜனுக்காக”, என்று பல பெயர்களை வைத்து கொண்டு எதிர்ப்பை தெரிவித்தனர். உண்மையில் இந்த எண்ணிக்கை ஐம்பதுக்கு மேல் தாண்டும். அதனால் அவர்களின் பெயர்களை மட்டும் இங்கே தவிர்க்கிறேன். டைம்லைன் முழுவதும் கருப்பாகவும், அனைவரின் புலம்பல்களும் காணப்பட்டது. பலர் அன்று ட்விட் போடுவதையே வெறுத்தனர். சொல்லபோனால் அன்று தமிழ் த்விட்டர்களுக்கு “கருப்பு” தினம்.

6. மேலும் பலர் ராஜன் சிறையில் இருந்து மீண்டும் வரும் வரை சொந்த ட்விட் போடப்போடுவதில்லை என்று கூறி விட்டு சென்றனர். அவ்வாறு சென்றவர்கள் @kalasal, @vimalashri, @morattumama போன்றோர்கள்.
அதிர்ச்சி தரும் தகவல் என்ன வென்றால் பலர் தங்கள் ட்விட்டர் ஐ.டி-யினை டீ-ஆக்டிவேட் செய்தனர். அவர்களின் விபரம் @vedhalam @kolaaru @tpkd @yazhini_appa @morattumama @ipokkiri @iindran @kullabuji@kattathora. இந்த செய்தி பெரும் இடியாக விழுந்தது. வேதாளம் அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு சென்றார்.

23-10-2012 – TUESDAY


1. சென்னை கமிஷனர் அவர்கள் சைபர் குற்றங்களுக்கு தயவு தாட்சண்யம் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறினார். (http://tamil.oneindia.in/news/2012/10/23/tamilnadu-the-punishment-such-crime-is-string-163584.html)

2. விமலாதித்த மாமல்லன் அவர்கள் தன் மேல் பொய் குற்றசாட்டு சாட்டப்பட்டுள்ளது என்றும், அவர் ட்விட்டுகளை சின்மயி அவர்கள் பொய் திருத்தி போட்டுள்ளார் என்றும் குற்றம் சாட்டினார். (http://www.maamallan.com/2012/10/blog-post_23.html?m=1).

3. எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள் இக்கைது சம்பவத்தினை பற்றி அவரது ப்ளாக்கினில் கூற பட்டிருப்பது (http://charuonline.com/blog/?p=3511).  

4. இந்நிலையில் திடீர் திருப்பமாக எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் (@losangelesram ) என்பவர் சின்மயி கொடுத்த புகாரில் என் பெயர் இருப்பதினால் எனக்கு கடும் மன உளைச்சல் உண்டாகியது என்றும், சின்மயி அவர்கள் கேசினை வாபஸ் பெறாவிட்டால் சின்மயி மீது மான நஷ்ட வழக்கு கோரப்படும் என்று கூறினார்.
அந்த செய்தியானது (http://tamil.oneindia.in/movies/news/2012/10/writer-condemn-chinmayi-wrong-complaint-163654.html) அணைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் வெளியானது. (http://dinamani.com/latest_news/article1311877.ece)

5. மேலும் ராஜன் அவர்களுக்கு ஆதரவு திரட்டும் நோக்கத்தோடு பேஸ்புக்கில் ஒரு தனி பக்கமானது உருவாக்கப்பட்டது. அதில் சின்மயி அவர்களின் தவறுகள் அனைத்தும் சுட்டி காட்டப்பட்டது. I Support Rajan Support Freedom Of Expression (https://www.facebook.com/ISupportRajanSupportFreedomOfExpression)


















6. முதன் முதலாக புதிய தலைமுறையானது இந்த செய்தியை கையிலெடுத்து விவாதம் மேற்கொண்டது. “நேர்பட பேசு” என்ற நிகழ்ச்சியில். இதில் கலந்து கொண்டவர்கள் கொற்றவை (@kotravai_n), மனுஷ்ய புத்திரன், மற்றும் கிருபா சங்கர் ஆகியோர். அதில் கொற்றவை என்ற பெண்மணியும், மனுஷ்ய புத்திரன் அவர்களும் சின்மயி கொடுத்த புகாரானது தவறு என்றும், அவர் மீனவர்களை பற்றியும் இட ஒதுக்கீடு பற்றியும் கூறிய தகவல்கள் முற்றிலும் தவறானது என்றும் விவாதித்தனர். ட்விட்டரில் பலர் அவர்களின் பேச்சை ஆதரித்தனர். அந்நிகழ்ச்சியில் சின்மயி அவர்களின் அம்மா அழைத்து சின்மயி அவர்கள் செய்த நற்பணிகளை பற்றி கூறி சின்மயி சொன்ன கருத்துகளுக்கு ஆதரவு தேடினார்.


7. பொதிகை செல்வன்(@) அவர்கள் சின்மயி- ராஜன் விவகாரத்தை 

விரிவாக TWITLONGER-இல் விவரித்திருந்தார் (http://www.twitlonger.com/show/jobjp7).


24-10-2012: WEDNESDAY

1. ராஜனுக்கு ஆதரவாக கொற்றவை அவர்கள் பேசியதற்கு குஸ்பு (@khushsundar) அவர்கள் கொற்றவை அவர்களை “DUMB GIRL” என்று சொன்னது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. (https://twitter.com/k_trends/status/261013054890864642/photo/1/large)
இவ்வாறாக சமூக வலைதளங்களிலும் , ஊடகங்களிலும் சின்மயிக்கு எதிர் குரல் பலமாக எழும்பியது.

2.  தோட்டா  (@அவர்களின் சமரச முயற்சியும், அதற்கு சின்மயி அவர்களின் தாயாரின் பதிலையும் இங்கே காணலாம். (http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html- via )

25-10-2012: THURSDAY

1. ஆனந்த விகடன் பத்திரிக்கையானது இப்பிரச்சினையை பற்றி தனது இதழில் எழுதியது. இருவரின் பக்கமும் உள்ள நியாயங்களை விரிவாக எடுத்துரைத்தது. (http://www.twitlonger.com/show/jos85e )

2. ராஜனுக்கு ஆதரவாகவும், சின்மயிக்கு எதிராகவும் பலர் கேள்வி கேக்க ஆரம்பித்தனர்.


26-10-2012: FRIDAY

1. இதுநாள் வரை சின்மயிக்கு ஆதரவாக பேசி வந்த பிரஷாந்த் (@itisprashanthஅவர்கள் உண்மை நிலை அறிந்ததாக கூறி ராஜனுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தார்.

2. மனுஷ்ய புத்திரன் அவர்கள் சின்மயி அவர்கள் முதலில் தமிழர்களிடமும், தலித்துகளிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரோட பிளாக்கில் எழுதினார். (http://www.newsalai.com/2012/10/blog-post_3328.html)

3. மேலும் முக்கியமாக அம்பேத்கார் பாசறை சார்பாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் சின்மயி மீது நடவடிக்கை எடுக்க கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது. (http://tamil.oneindia.in/movies/news/2012/10/ambedkar-pasarai-complaints-against-chinmayi-163703.html).

4. வெட்டிபுள்ளை (@vettipullai என்ற புனை பெயர் கொண்ட தோழி இங்கிலாந்தில் இருந்து சினம்யிக்கு எதிராக முற்றிலும் ஆங்கிலத்தில் எழுதி எதிர்ப்பை காண்பித்தார். ACRID REVENGE LETTER TO CHINMAYI (http://vettipullai.blogspot.co.uk/2012/10/acrid-revenge-letter-to-chinmayi.html)

27-10-2012: SATURDAY

1. அம்பேத்கார் பாசறை கொடுத்த புகாரானது அணைத்து பத்திரிக்கைகளிலும் வெளிவந்தது. அதன் இணைப்புகள்:

2. இந்நிலையில் ஜூனியர் விகடனும் இரு தரப்பு நியாயங்களை வெளியிட்டது. (http://www.twitlonger.com/show/jpq3ro - via @DKCBE )

3. லீணா மணிமேகலை (பதிவு அவரால் நீக்கப்பட்டு விட்டது) அவர்கள் சின்மயிக்கு ஆதரவாக இட்ட பதிவினில் டேவிட் ஜெபராஜ்(அவர்கள் ஒரு நீண்ட பதிலை அளித்தார். இந்த பதில் பரவலாக த்விட்டரினில் பகிரப்பட்டது (https://www.facebook.com/ISupportRajanSupportFreedomOfExpression/posts/377764605638355

28-10-2012: SUNDAY

1. மாயவரத்தானை (@mayavarathaan) பற்றி இங்கு எடுத்துரைக்கப்படுகிறது. இங்கு. (http://rightnews.in/5360/the-journalist-who-is-seducing-sinmayi/)

2. பாக்கியாராஜன் (@packiarajanஅவர்கள் ராஜனோடு நான் நிற்கிறேன் என்று குறிப்பிட்ட TWITLONGER (http://www.twitlonger.com/show/jocmd4)

மற்றும்

3. கீற்று வலைதளத்தில் வெளிவந்த டி.அருள் எழிலன் அவர்களின் கட்டுரையானது (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21793) பெருமளவில் ட்விட்டரில் பகிரப்பட்டது.

4. மகேஷ் மூர்த்தி (@maheshmurthyஎன்ற பத்திரிக்கை ஆசிரியரிடம் இக்கைது சம்பவம் பற்றி விபரம் கூறப்பட்ட போது அவர் சின்மயியை பற்றி கூறப்பட்ட செய்திகள் முழுவதும்  (http://storify.com/chandsethu/mahesh-murthy-revisits-his-socialmedia-article-say) :

29-10-2012: MONDAY

1. ஜெயமோகன் அவர்கள் ட்விட்டரில் உள்ள ஆபாச மனிதர்களை காப்பாற்ற 15 லட்சம் நிதி வசூல் என்று கூறினார். (http://www.jeyamohan.in/?p=31424) ராஜனை ஆதரித்து பேசிய மனுஷ்ய புத்திரனை பற்றியும் பேசியிருந்தார்.

2. ராஜ் டிவியில் கோப்பியம் என்ற நிகழ்ச்சியில் இச்சம்பவத்தினை பற்றி வந்த தொகுப்பு (http://www.youtube.com/watch?v=8PK0morVLYU&feature=plcp).

3. இன்று மாலை நான்கு மணிக்கு ராஜனின் பெயிலுக்கு தீர்ப்பு வரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இறுதியில் தீர்ப்பானது மறுநாள் (நாளை) ஒத்தி வைக்கப்பட்டது.

30-10-2012: TUESDAY








31-10-2012: WEDNESDAY

1. ராஜனின் பெயில் மனு நிராகரிக்கப்பட்டு இரண்டு நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைக்க உத்தரவிட்டது நீதி மன்றம்.







2. கணேஷ் வசந்த் (@GaneshVasanth) அவர்கள் எழுதிய ஒரு ட்விட்லாங்கர் ஆனது பரவலாக பகிரப்பட்டது. இதில் நாகரிகமும், ஆபாசமும் எவ்வாறு வேறு பட்டு உள்ளது என்று எடுத்துரைக்க படுகிறது. (http://www.twitlonger.com/show/jrarhg)

3. அதீசா (@athishaஅவர்கள் "வெட்டி எறியப்படும் சிறகுகள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையினை தன் பிளாக்கில் வெளியிட்டார் (http://www.athishaonline.com/2012/10/blog-post_30.html


01-11-2012: THURSDAY

1. #unFollowChinmayi என்ற டேக்கில் பல ட்விட்டுகள் வெளியிடப்பட்டன.

02-11-2012: THURSDAY

1. பிரஷாந்த் அவர்கள் (@itisprashanthThe so called "Chinmayai Issue"..!!! என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை youtube-il வெளியிட்டார். (https://www.youtube.com/watch?feature=player_embedded&v=tLQMG7vrKQw)  

2. இன்று மாலை நீதி மன்றமானது ராஜனுக்கு பெயில் அளிக்க உத்தரவு இட்டது.


03-11-2012: FRIDAY
1. ஜானி என்ற பத்திரிக்கையாளர் இக்கைதினை பற்றி கருத்து தெரிவித்திருந்தார். அந்த கருத்து (http://www.newsalai.com/2012/11/blog-post_7367.html).

2. இன்று காலை பத்து மணி அளவில் ராஜன் 12 நாட்கள் (22-10-2012 to 3-11-2012) சிறை வாசத்திற்கு பிறகு வெளியே வந்தார்.



12 நாள் சிறைவாசத்திற்கு பிறகு ..ராசன்.!!

எக்மோர் நீதி மன்றத்தில் ராசனுடன் ..உமர்கயான். சே.ஜெ


3 comments:

  1. அனைத்தையும் ஒரே இடத்தில் தந்தமைக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. நல்ல ஒரு தொகுப்பு! பாராட்டுக்க்கள்!

    ReplyDelete