Friday, 2 November 2012

கட்டதொரை மச்சான்

அன்புள்ள கட்டதொரை மச்சானுக்கு:

அன்பு கலந்த ட்விட்டர் தமிழ் உள்ளங்கள் சார்பாக நான் எழுதிகொல்(ள்)வது..

தாங்கள் தங்கள் ஐ.டீ-யை  டீ-ஆக்டிவேட் செய்தது மிகவும் வருத்தமாய் உள்ளது.
தண்ணி வந்துடுச்சு தெரியுமா பைப்புல.. ச்சை.. கண்ணுல..

எங்கள விட்டுட்டு நீங்க மட்டும் அங்க நிம்மதியா இருப்பீங்களா என்ன? சொல்லுங்க மச்சான்.. சொல்லுங்க மச்சான்..

சந்துகுள்ள வாங்க.. இங்க எத்தனை பேரு ஐ.நா சபையில கையெழுத்து போடுற வேலையெல்லாம் விட்டுட்டு உங்களுக்காக டேக் போட்டு ஓட்டுறாங்க.. ச்சை.. சாரி.. கூப்ட்றாங்க தெரியுமா? உங்களுக்கு ஏன் இந்த கள். ச்சை.. திரும்பவும் சாரி.. கல் மனசு?

மைக்ரோமேக்ஸ் ஃபன்னு புக்கு தரேன்னு சொல்லிட்டு சொல்லிக்க கூட இல்லாம ஓடிபோய்டியே... :-(  ஏ மச்சான்? பி மச்சான்? சி மச்சான்? நீ எங்க போன மச்சான்?

வேலை வெட்டி இல்லாம மொட்டு வலைய வெறிக்க வெறிக்க பார்த்த எங்களை எல்லாம் "வெட்டி பேட்டிங்" என்று ஒரு அழகான சுய வேலை வாய்ப்பு திட்டத்தை தந்து எங்கள் வாழ்க்கையில் மங்கா ஒழி.. ச்சை.. I'm asking once again sorry.. ஒளி விளக்கேற்றிய தெய்வமே?  "அன்பே வா"

பையில ஒரு ருபாய் கூட இல்லாம சுத்திகிட்ட இருந்த வெறும் பயலுவோக்கு கடனா கூட இல்லாம, அட சும்முனாச்சுக்கும் கந்து வட்டிக்கு கூட இல்லாமா சொந்தமா 10000 பாய்ன்ட் கொடுத்த குபேரனே?  நீ திரும்ப வா.. பாடி வா.. ஓடி வா.. ஆடி வா.. ஆவடி வா..

அப்பப்போ கரண்டுக்கே என்னை தொட்டா பயந்து உள்வாங்கிக்கும்னு பஞ்ச் டயலாக் பேசுவியே.. அந்த காமெடி ச்சை.. வீர வசனத்தை எல்லாம் சொல்றதுக்கு ஆள் இல்லாம, இங்க சில எட்டப்பன் மொளச்சுட்டாங்க.. நீதான் மச்சான் வந்து களை எடுக்கணும். திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வா..

நான் சொன்னா நீ நம்ப மாட்ட?
கீழே உள்ள போட்டோக்களை  பாரு..
எத்தனை டேக்..
உனக்காக கண்ணீர் சிந்தி போட்ட த்விட்டுகளை பார்.. பார்.. பார்..
(அப்புடியே பாருக்குள்ள போய்டாத மச்சான்!!!!)












ராஜன் இல்லாத நேரத்துல எங்களுக்கு குழி பறிக்க நிறைய பேர் காத்திருக்கும் போது ஆறுதல் சொல்ல கூட நீ இல்லாமல் வக்கற்றவர்களாக கலங்கி போய் நின்னோம் மச்சான்.. வா.. வா.. வா.. எரிமலையாய் வா..

 வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறோம்.. "நீ வருவாய் என"..

பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாயென..
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென..



வந்துடு.. வந்துடு.. :-)

மக்களுக்காக:
கட்டதொரையின் E-mail ID      : manivanna.siva@gmail.com
கட்டதொரையின் TWIITER ID: https://twitter.com/kattathora

4 comments:

  1. செம கலக்கல்ஸ் கார்த்திக் ... ஜாலி போஸ்ட் இது ...உங்க எழுத்து நடையும் நல்லா இருக்கு பா... இன்னும் எழுதுங்க :-) @sweetsudha1

    ReplyDelete
  2. சூப்பர் கார்த்தி....இதுக்கப்பரமும் கட்டை வரலனா கட்ட விளக்குமாறு சீப் ரைட்டர் நீதான்....ஆல் தி பெஸ்ட்...

    ReplyDelete
  3. சூப்பர் கார்த்தி....இதுக்கப்பரமும் கட்டை வரலனா கட்ட விளக்குமாறு சீப் ரைட்டர் நீதான்....ஆல் தி பெஸ்ட்...

    ReplyDelete
  4. ஹி..ஹி.. கட்டவெளக்குமாறு -க்கு நான் சீப் ரைட்டரா? வெளக்கமாத்தாலயே அடிக்க வந்துருவாரு மாயவரம் மைனர்..:-) பை த பை இருவருக்கும் நன்றிகள்.. :-)

    ReplyDelete