Sunday, 19 August 2012

கருணாநிதி (WHY MR. KARUNANIDHI?)

அனைவருக்கும் வணக்கம்.
உளறலின் ஓங்காரத்திற்கு தங்களை வரவேற்கிறேன்.
இது என்னுடைய இரண்டாவது போஸ்ட்... :-)
வாங்க இன்றைய பதிவினுள் செல்லலாம்...



கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் சமூக வலைதளங்களில் கருணாநிதி பெயர் தாறு மாறாக இடம்பெற்றதிற்கு காரணம்?
தமிழ் ஆர்வலர் (?) TWITTER மற்றும் FACEBOOK-ல் வந்துட்டாரு.

" சும்மாவே நாம ஆடுவோம்.. இதுல சலங்கைய வேற கட்டி விட்டு"

தாத்தா தேவை இல்லாமல் ஊசியில் நூல் கோப்பாரா என்ன? இங்கு வந்தமைக்கு காரணம் என்னவாக இருக்கும்? சிறிது அனைத்தையும் விட்டு வெளியே சென்று சிந்தித்ததில் உண்மை சிறிது விளங்கிற்றா?

விளங்கிற்று.. 

விளங்கியதை இறுதியில் பார்ப்போம்.

அதற்கு முன் பத்து வருட ஆட்சியின் சில அவலங்களை தோலுரிக்கணும். அப்போ புரியும். 

 

அ. இலவச கலர் தொலைக்காட்சி:

ஒட்டு வாங்க என்ன செய்யணுமோ அதை சரியாக செய்த கருணாநிதி. ஹாலில் ஒரு டிவி, படுக்கறையில் ஒரு டிவி, ஏன், சமையலறையிலும் டிவி கொண்டு வந்த பெருமை திருக்குவளை மைந்தனையே சாரும். ஒவ்வொரு சின்ன கடையிலும் டிவி வந்துச்சு. எல்லோரும் கலைஞர் டிவி, சன் டிவி - னு பாத்தாங்க. மாலையில் குழந்தைகளின் கண்ணாமூச்சி விளையாட்டு எல்லாம் ஒழிந்து மானாட மயிலாட பார்த்து வியக்க ஆரம்பித்தது.
ஒன்னு கேக்குறேன்? சன் டிவியோ இல்லை கலைஞர் டிவியோ தமிழ்ல கல்விக்கென்று ஒரு சேனல் ஏன் இன்னும் உருவாக்கவில்லை? எல்லாம் வியாபார தந்திரம்..
கழக (கலக) செய்திகளை பார்க்க நாடெங்கும் இலவச டிவி கொடுத்த பெருமை கருணாநிதியை சாரும்.

ஆ. கூட்டுறவு கடன் ரத்து

விவசாய உற்பத்தி பெருக்கவோ, மின்சார விநியோகத்தை சீராக்கவோ என்ன பண்ணும்னு தெரியல. நேரிடையாக கூட்டுறவு கடனை ரத்து செய்தால் எல்லாம் சரியாகிவிடுமா? கடன் வாங்கி tractor மற்றும் கதிரடிக்கும் இயந்திரம் வாங்கியவனுக்கெல்லாம் கடன் தள்ளுபடி? இதுதான்  அரசாங்கம் நடத்தும் லட்சணமா?  
அச்சமயத்தில் கடன் வாங்காத விவசாயின் வயிறோ கப கபவென்று பற்றி எரிந்தது.

இ. இலங்கை தமிழர்களுக்கு பச்சை துரோகம்

அனைவரும் அறிந்ததே. சொல்ல எதுவும் இல்லை. போர் நிறுத்தம் செய்யணும் என்று AIR COOLER மற்றும் மெத்தை சூழ போரூர் மருத்துவமனையில் ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் (ரெஸ்ட்) இருந்தவர் நீர் மட்டும் தானய்யா.
கேள்வி:  போர் மெய்யாலுமே நின்றதா? நிறுத்தப்பட்டது என்று உன் குடும்ப டிவி மட்டுமே சொன்னது. (சொல்லப்பட்டது!!!)

போர் நடக்கும் போதெல்லாம் மன்னர் என்று நினைத்து கொள்வீரோ? தந்தி அனுப்ப வேண்டியது. (வாயில வண்டி வண்டியா வருது!)
அழுகிரிக்கு (!) பதவி வாங்க வெக்கமில்லாமல் டெல்லி போனவர் தானே நீர்.
நீர் தமிழின தலைவரா? இதுல டெசோ மாநாடு வேற. முழுதும் பித்தலாட்டம்.
காத்திருங்கள் "ஒரு மணி நேர உண்ணாவிரத புகழ்" என்று குஷ்பு பட்டம் கொடுத்தாலும் கொடுப்பார்.


ஈ. பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா

தேவையா? முழுசா அரை நாள் எந்த ஒரு வேலையும் செய்யாம முழுசா புகழ்ச்சியை மட்டுமே கேட்க வேண்டியது. வரவன் போரவன் எல்லாம் புகழ்ந்து தள்ளுவான். பொன் விழா ஆண்டு, சினிமா நட்சத்திரங்களின் பாராட்டு விழா, சின்னத்திரை விழா, மானாட குஸ்ஷாடவின்  100 விழா. எத்தனை எத்தனை ??? சட்ட சபைக்கு ஒழுங்கா ஒக்காந்து ஆட்சி செய்திருந்தால்??? 
நீர் மட்டும் இல்லாமல் எல்லா அமைச்சரையும் கூட்டி கொண்டு வந்துற வேண்டியது. கை தட்ட தான?

 

உ. செம்மொழி மாநாடு

தமிழன் என்பதால் நானும் போயிருந்தேன் கோவைக்கு. மாநாடா அது? புகைப்படங்களை பாருங்கள். புரியும். தமிழ், முப்பது ரூபாய் மலிவு சாப்பாட்டிற்கு மிதி பட்டு செத்தது. மாநாட்டில் தமிழானது உடன் பிறப்புகளின்  சாராய + சிகரேட் நெடியில் உழன்றது.

மாலை ஆறு மணிக்கு மேடைக்கருகில் சென்றிருந்தோம். வீணை கச்சேரி நடந்து கொண்டிருந்தது. பார்வையாளர்களின் மத்தியில் கருணாநிதி. வியந்தேன். கச்சேரி ஒன்றும் அவ்வளவாக இல்லை. பழகி போன "அலை பாயுதே கண்ணா" பாடல் தான். இறுதியில் தான் தெரிந்தது, வாசித்தது கைதட்டு வாங்கியது வேறு யாருமில்லை. அவரின் பேத்தி எழிலரசி. முடிந்ததும் குடும்பமே காலி. அதன் பிறகு அனாதையாக பேருக்கு சில அரங்கேற்றங்கள் நடந்தன.
பேத்தி எழிலரசி

கோவை பல புதிய ஒரு நாள் ரோடுகள் வந்தன. மாநாடு முடிந்த பிறகு கோவையின் அலங்கோலத்தை கண்டு கொள்ளவில்லை அரசு. கோவையின் சட்டசபை மற்றும் நகராட்சி தேர்தலில்  தி.மு.க-வின் படு தோல்விக்கு இதுதான்  காரணம்.

தமிழ்  மாநாட்டில்நடந்த அவலங்களை கீழே உள்ள புகைப்படங்களில் பாருங்கள். அனைத்தும் மாநாட்டு நாள் அன்று மாநாடு பந்தல் அருகில் என்னால் எடுக்கப்பட்டது.

பிரசார சிடிக்கள்

பீடி சிகரெட் பான்பராக்



ஸ்டாலின் பலூன்

மாநாடு பந்தல் அருகில்
சிறுநீர் கழிக்கும் மக்கள்



மக்கள் பணத்தை வாரி இறைத்து குடும்பமே அரங்கேற்றம் கண்ட மாநாடு.

 

எ. குடும்ப தலைவன்

ஆமாம். குடும்பத்திற்காக இவர் உழைக்கும் உழைப்பு இருக்கே.!!!!!

கனிமொழி, திகார் பிரச்சனையா? கெளம்பு டெல்லிக்கு.
அழகிரி பிரச்சனையா? கொடு மந்திரி பதவி.
சன் டிவி பிரச்சினையா? ஆரம்பி புதிய சேனல்.
தினகரன்  பிரச்சனையா? மறைத்து விடு முழுவதையும்.
பேரன் படம் ஒடுனுமா? சொல்லு படம் அருமைனு.
தன்னோட பேனருக்கு லாபம் வேணுமா? எழுது வசனம்.
குடும்ப  பேனருக்கு லாபம் வேணுமா? ஆரம்பி கேளிக்கை வரி ரத்து.
கட்சிக்கு  எதிர் சேனலா? கில்லி ஏறி முளையிலே.
 ஆனால்
காவேரியில்  தண்ணீர் இல்லையா? அனுப்பு தந்தி.
இலங்கையில் தமிழர்கள் கொல்லபடுகிறார்களா? அனுப்பு தந்தி.

நீரெல்லாம் காமராசர் ஆண்ட தமிழகத்தின் முதல்வர்தானா?

குடும்பத்துக்காக நாட்டை, தமிழர்களின் மானத்தை கூறு போட்டு வித்த நய வஞ்சகர்.


நிறைகள் இருந்திருக்கலாம் உன் ஆட்சியில். ஒருவேளை அது குறைகளை விட அதிகமாயிருந்தால் இந்நேரம்  நீர் முதல்வர் நாற்காலியில் இருப்பீர். இல்லை. எதிர்கட்சிக்கு கூட தகுதி பெற முடியா அளவுக்கு வெரட்டி அடிக்கபட்டீர். இப்போ TWITTER-லும் FACEBOOK-லும் வர என்ன காரணம்.?


எப்படியும் ஓரிரு வருடங்களில் இறந்து விடுவீர. காலம் நெருங்கி விட்டது என்று அறிந்து கொண்டீர். இறக்கும் வரை கலைஞர் டிவி, சன் டிவி, முரசொலி, சூரியன் எப்.ம், TWITTER,  FACEBOOK, தினகரன், என சரமாரியாக எல்லா நேரிடை தளங்களிலும் நல்லவன் போல் நடிக்க போறீர். மக்கள் மனச மாத்துறது உங்களுக்கு தெரியாதா என்ன? ஒரு வருஷம் கனமான போர்வையாக போத்திக்கொண்டு இருந்தால் உள்ளுக்குள் உள்ளவற்றை மக்கள் மறந்து விடுவார்கள் என்ற எண்ணம்தானே.??


தற்பொழுது TWITTER மற்றும் FACEBOOK ஆகிய இரண்டும் மட்டும்தான் விசயங்களை விரைவாகவும், நேரிடையாகவும், மக்களிடம் உடனுக்குடன் கொண்டு செல்கின்றன. ஆதலால் இவரும் வந்துவிட்டார்.

இதுக்கப்புறம் காவேரி பிரச்னை, இலங்கை பிரச்னை, சிறை நிரப்பும் போராட்டம், விலை வாசி எதிர்ப்பு போராட்டம் போன்ற அனுதாபம் பெறக்கூடிய விசயங்கள் அனைத்தும் தி.மு.க வினால் நாட்டில் நடந்தேறும். அவை அனைத்தும் வெற்றி! வெற்றி!! வெற்றி!!! என அனைத்து தளங்களிலும் நேரிடையாக கூவப்படும்.



நடக்கும் நாடகத்தை ஒன்று  சேர்ந்து பாக்கத்தான போகிறோம். பார்க்கலாம்.

வாசித்தமைக்கு நன்றிகள் பல. தங்களின் மேலான கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும். தவறினை மறக்காமல் சுட்டி காட்டவும்.


இப்படிக்கு,
தமிழன்,
கார்த்திகேயன்.வி
19-08-2012*4.30PM


கொசுறு: வயது மூத்தவர், கட்சி தலைவர்  என்ற முறையில் எங்கும் அவரை இழிவான முறையில் கையாளவில்லை. எங்கேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

1 comment:

  1. பதிவு நன்றாக எழுதப்பட்டுள்ளது மற்றும் உண்மையாகவும்

    ReplyDelete