Saturday, 18 August 2012

பிள்ளையார் சுழி

 
அனைவருக்கும்  வணக்கம், 
 
புதுசா, முதன் முதலா BLOG உருவாக்கிருக்கேன்..

எனக்கு சத்தியமா கவிதா எழுத வராது, நகைச்சுவையா எழுதவும் வராது.
இதுல  என்ன எழுத்து போறேன்னு எனக்கு தெரியாது...

ஒன்னு நல்லா புரியுது, post பண்ணுவது ,  புதுசா ஒரு BLOG உருவாக்குவது போன்று அவ்வளவு எளிதன்று.... BLOG  ஈசியா உருவாக்கிட்டேன்... ஆனால்......!!!!!!!!!!

BLOG ல எழுதுவது என்பது PRACTICAL-லில் VIVA கேட்பது போல்...
"வண்டி வண்டியா உள்ளுக்குள்ள நெறைய  வரும்.. ஆனால் சொல்ல முடியாது"... 
இங்க எழுத முடியல...

 "அப்புறம் எதுக்குடா உனக்கு ஒரு BLOG?"


கேள்விக்கு பதில் சொல்லும் முன்..... நான் கொஞ்சம் யோசிக்கணும்... !!

நான் ஏன் இங்கு வந்தேன்?  இங்க வந்து என்னால என்ன பண்ண முடியும்?

BLOG உருவாக்கியதற்கு காரணம்...!!!!  இதோ..

ஒன்று : அமரர் கல்கி.. அவரின் நகைச்சுவை கதைகள், புதினங்கள் படித்ததால் கிடைத்த அனுபவங்கள்.. சுவை குறையாமல் நேர்த்தி நீடாமல் சொல்ல வந்ததை சிறுது கற்பனை சேர்த்து அரிதான நகைச்சுவையும் சேர்த்து எழுதும் நீர் பெரிய ஆள்யா...


"பொன்னியின் செல்வன் படித்து முடித்த ஒரு வாரம் பூமியில் தான் நான் இருந்தேனோ?" இந்த நிமிடம் வரை சந்தேகம்...

இரண்டு :  TWITTER... பலரின் படைப்பை பார்த்து வியந்துள்ளேன்.. படைத்தவர்களின் பெயர்களை சொல்லலாம்... அப்படி  சொன்னால், "அவர்களின் படைப்பை படித்தவன்" என்ற மலிவான விளம்பரம் தேடி கொண்டது  போலாகிவிடும்..   ஆ தலால் அப்படியே விட்டு விடுகிறேன்.. 

மூன்று : ஆனந்த விகடன்... மெய்யாலுமே பல வித யதார்த்தங்களை தாங்கிய படைப்புகள்.. வாசிக்க தூண்டிய துணுக்குகள்... 

 

"சரி... வந்துட்ட விடு...அது என்ன "உளறலின் ஓங்காரம்"???


சொல்றேன்... 
கவிதை வருவது, நகைச்சுவை வருவது, போஸ்ட் பண்ணுவது மற்றும் பண்ண போவது எல்லாமே எல்லாருக்குமே வரும் ஒரு விதமான உளறல் தான்... 

உளறல் வெறும் உளறலாக இல்லாமல் ஒரு விதமான பெரிய இரைச்சலோடு (ஓங்காரமாக ) ஒலிக்கும் போது மட்டுமே அதன் சிறப்பியல்பு தனித்துவமாக  தெறிக்கும்... 

என்னுடைய போஸ்டுகள் அவ்வாறு இருக்கும் என்ற நம்பிக்கையில் தலைப்பை வைத்துள்ளேன்.. 


ஓங்காரம் என்பதற்கு உண்டு பல பொருள்கள் .. அதில்  ஒன்றுதான் பேரிரைச்சல்...  மனதில் எழும்  பேரிரைச்சலை இறக்கி வைக்கும் வடிகாலாக இந்த BLOG இருக்கும் .... 
என்னுடைய போஸ்டுகள் என் மனதின் உள்ளே ஓயாமல் ஒலிக்கும் ஓங்காரமாக இருக்கும்...

என்னுடைய இந்த பிள்ளையார் சுழிக்கு தங்களின் மேலான ஆதரவை எதிர்நோக்கும்,

தமிழ் இளைஞன்,

கார்த்திகேயன்.வி
18-08-2012*6.45 PM 


கொசுறு: 
1. படங்கள் attach பண்ணியதற்கு காரணம் ஏதும் பெரிதாக இல்லை... பரீட்சை  எழுதும் போது அதிகம் பதில் தெரியாத கேள்விக்கு படம் பெரிதாக போடுவதில்லையா? அது போலத்தான் :-)






No comments:

Post a Comment