Monday, 27 August 2012

என் காதுல பூவ சொருகிட்டு போய்ட்டா...



நான் இப்படி இருக்கும் போது...



ஒரு நாள், ஒரு பெண்ணை பார்த்தேன்...!!
 







 

அவ எப்படி இருப்பா தெரியுமா ?????
.
.
.
.
.
.
.
இங்க பாருங்க !



அவ மேக்-அப்  போடாம இருந்தப்ப எப்புடி இருந்தா தெரியுமா ???



அப்படி இருந்தும் எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்....

நான் அவ கிட்ட ரொம்ப பொய் சொல்லுவேன்..
.
.
.
நீ ரொம்ப அழகா இருக்கன்னு..



அவளுக்கு ரொம்ப நம்பிக்கை கொடுத்தேன்...



விலை உயர்ந்த கிப்டெல்லாம் வாங்கி கொடுத்தேன்..




அவ என் காதலை ஏத்துக்கிட்ட உடனே நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன்...!!




நைட்டு முழுக்க போன்ல பேசிட்டு , ஆபீஸ்ல போய் என்ன பண்ணுவேன் தெரியுமா..????





நான் என் கேர்ள் பிரெண்டு கூட போகும் போது, ஏன் பிரெண்ட்செல்லாம் எப்படி பார்ப்பாங்க தெரியுமா ????




அப்போ நான் அவங்களுக்கு எப்படி போஸ் கொடுப்பேன்னா...



ஆனா கடைசியா அவ என்ன பண்ணா தெரியுமா ????



என் காதுல பூவ சொருகிட்டு போய்ட்டா...
.
.
.
.
.
அப்புறம் எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல .....???
?
?
?
?




அதுல இருந்து நான் சிகரெட்டு பிடிக்க ஆரம்பிச்சேன்..!!!





தண்ணியடிக்க ஆரம்பிச்சேன்....!!!



தாடி முளைச்சு தேவதாசா மாறிட்டேன்...







அன்புடையோரே, இந்த அருமையான கதை எனது நண்பனிடமிருந்து பெற்றேன். அதை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். எப்புடி இருந்துச்சு?
இப்படிக்கு
கார்த்திகேயன்.வி
27-08-2012,
திங்கள் கிழமை.


 

Sunday, 19 August 2012

கருணாநிதி (WHY MR. KARUNANIDHI?)

அனைவருக்கும் வணக்கம்.
உளறலின் ஓங்காரத்திற்கு தங்களை வரவேற்கிறேன்.
இது என்னுடைய இரண்டாவது போஸ்ட்... :-)
வாங்க இன்றைய பதிவினுள் செல்லலாம்...

Saturday, 18 August 2012

பிள்ளையார் சுழி

 
அனைவருக்கும்  வணக்கம், 
 
புதுசா, முதன் முதலா BLOG உருவாக்கிருக்கேன்..

எனக்கு சத்தியமா கவிதா எழுத வராது, நகைச்சுவையா எழுதவும் வராது.
இதுல  என்ன எழுத்து போறேன்னு எனக்கு தெரியாது...

ஒன்னு நல்லா புரியுது, post பண்ணுவது ,  புதுசா ஒரு BLOG உருவாக்குவது போன்று அவ்வளவு எளிதன்று.... BLOG  ஈசியா உருவாக்கிட்டேன்... ஆனால்......!!!!!!!!!!

BLOG ல எழுதுவது என்பது PRACTICAL-லில் VIVA கேட்பது போல்...
"வண்டி வண்டியா உள்ளுக்குள்ள நெறைய  வரும்.. ஆனால் சொல்ல முடியாது"... 
இங்க எழுத முடியல...

 "அப்புறம் எதுக்குடா உனக்கு ஒரு BLOG?"


கேள்விக்கு பதில் சொல்லும் முன்..... நான் கொஞ்சம் யோசிக்கணும்... !!

நான் ஏன் இங்கு வந்தேன்?  இங்க வந்து என்னால என்ன பண்ண முடியும்?

BLOG உருவாக்கியதற்கு காரணம்...!!!!  இதோ..

ஒன்று : அமரர் கல்கி.. அவரின் நகைச்சுவை கதைகள், புதினங்கள் படித்ததால் கிடைத்த அனுபவங்கள்.. சுவை குறையாமல் நேர்த்தி நீடாமல் சொல்ல வந்ததை சிறுது கற்பனை சேர்த்து அரிதான நகைச்சுவையும் சேர்த்து எழுதும் நீர் பெரிய ஆள்யா...


"பொன்னியின் செல்வன் படித்து முடித்த ஒரு வாரம் பூமியில் தான் நான் இருந்தேனோ?" இந்த நிமிடம் வரை சந்தேகம்...

இரண்டு :  TWITTER... பலரின் படைப்பை பார்த்து வியந்துள்ளேன்.. படைத்தவர்களின் பெயர்களை சொல்லலாம்... அப்படி  சொன்னால், "அவர்களின் படைப்பை படித்தவன்" என்ற மலிவான விளம்பரம் தேடி கொண்டது  போலாகிவிடும்..   ஆ தலால் அப்படியே விட்டு விடுகிறேன்.. 

மூன்று : ஆனந்த விகடன்... மெய்யாலுமே பல வித யதார்த்தங்களை தாங்கிய படைப்புகள்.. வாசிக்க தூண்டிய துணுக்குகள்... 

 

"சரி... வந்துட்ட விடு...அது என்ன "உளறலின் ஓங்காரம்"???


சொல்றேன்... 
கவிதை வருவது, நகைச்சுவை வருவது, போஸ்ட் பண்ணுவது மற்றும் பண்ண போவது எல்லாமே எல்லாருக்குமே வரும் ஒரு விதமான உளறல் தான்... 

உளறல் வெறும் உளறலாக இல்லாமல் ஒரு விதமான பெரிய இரைச்சலோடு (ஓங்காரமாக ) ஒலிக்கும் போது மட்டுமே அதன் சிறப்பியல்பு தனித்துவமாக  தெறிக்கும்... 

என்னுடைய போஸ்டுகள் அவ்வாறு இருக்கும் என்ற நம்பிக்கையில் தலைப்பை வைத்துள்ளேன்.. 


ஓங்காரம் என்பதற்கு உண்டு பல பொருள்கள் .. அதில்  ஒன்றுதான் பேரிரைச்சல்...  மனதில் எழும்  பேரிரைச்சலை இறக்கி வைக்கும் வடிகாலாக இந்த BLOG இருக்கும் .... 
என்னுடைய போஸ்டுகள் என் மனதின் உள்ளே ஓயாமல் ஒலிக்கும் ஓங்காரமாக இருக்கும்...

என்னுடைய இந்த பிள்ளையார் சுழிக்கு தங்களின் மேலான ஆதரவை எதிர்நோக்கும்,

தமிழ் இளைஞன்,

கார்த்திகேயன்.வி
18-08-2012*6.45 PM 


கொசுறு: 
1. படங்கள் attach பண்ணியதற்கு காரணம் ஏதும் பெரிதாக இல்லை... பரீட்சை  எழுதும் போது அதிகம் பதில் தெரியாத கேள்விக்கு படம் பெரிதாக போடுவதில்லையா? அது போலத்தான் :-)